.
பச்சைமலை தமிழ்நாட்டில்,
ஆகிய மாவட்டங்களில் பரவி நிற்கும் ஒரு மலைத்தொடர்.
பச்சைமலையில் வாழும் மக்கள் நான்கு நாடுகளாக பச்சைமலையை சுட்டிக் காட்டுகின்றனர். அவைகள்
1. மங்கலம் அருவி...
பச்சைமலை தமிழ்நாட்டில்,
ஆகிய மாவட்டங்களில் பரவி நிற்கும் ஒரு மலைத்தொடர்.
- தென்புறனாடு,
- ஆத்தினாடு,
- வன்னாடு,
- கோம்பை நாடு ஆகிய நான்கு நாடுகளிலும் 48 கிராமங்கள் உள்ளன.
தொழில்கள்:
இம்மலைவாழ் மக்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழில். பச்சைமலையில் நாட்டின் தேசிய தாவர இனங்கள், மூலிகை வகைகள் காணக்கிடைக்கின்றன. இம்மக்கள் அணிகலன்களும், உடைகளும், வீடுகளின் அமைப்புகளும், கால மாறுதலுக்கு ஏற்ப சமவெளியில் வாழும் மக்களை ஒட்டியே அமைந்துள்ளன. வானொலியும், தொலைக்காட்சியும் எங்கும் கிடைக்கும் இக்காலத்திலும், பொழுதுபோக்கிற்காக நாடகங்களும், பாடல்களும் நடத்தி வருகின்றனர், பச்சைமலைவாழ் மக்கள்.பச்சைமலையில்
- மரவள்ளி கிழங்கு(உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு)
- பலாப்பழம்
- மாம்பழம்
- முத்திரி அதிகமாக விளைகின்றது.
1. மங்கலம் அருவி...
2.பச்சமலை மரவீடுகளில் தங்க கட்டணம் 40 சதவீதம் குறைப்பு
திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமாக பச்சமலை விளங்குகிறது. கொல்லிமலையுடன் தொடர்புடைய இந்த பச்சமலையில் ஏராளமான அரிய வகை விலங் குகள், பறவை இனங்கள் வசிக்கின்றன. இன்னும் பழமை மாறாத பழங்குடியின மக்கள் ஏராளமாக இங்கு வாழ்கின்றனர். பச்சமலையின் அழகை கண்டு, இயற்கையை வனப்பை ரசித்துக்கொண்டாட வனத்துறை சார்பில் பச்சமலை சூழலியல் சுற்றுலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பச்சமலையின் உச்சி முகடான டாப் செங்காட்டுப்பட்டி என்ற இடத்தில், ரம்மியமான சூழலில், 4 மரவீடுகளையும் ஒரு பழங்கால தனி வீட்டையும், பலர் ஒன்றாக தங்கும் டார் மெட்ரியையும் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கட்டி வைத்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக இந்த விடுதிகளில் தங்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர். ஆனால், மரவீடுகள், தனி வீடு, டார்மெட்ரி தங்கும் விடுதிகளின் வாடகை அதிமகாக இருப்பதாகவும், வாடகையை குறைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் வாடகையை மறு பரிசீலனை செய்து, அண்மையில் புதிய வாடகை பட்டியலை அறிவித்துள்ளனர்.
அதன்படி, நான்கு பேர் தங்கக்கூடிய மரவீடுகளில் ஒரு நாள் முழுவதும் 24 மணி நேரம் தங்க, முன்பு ரூ.2,500 வசூலிக்கப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.1,500 ஆக குறைக்கப் பட்டுள்ளது. இருவர் தங்கக்கூடிய தனிவீட்டுக்கு ரூ.1,500 வசூலிக்கப்பட்டது தற்போது ரூ.1,000 ஆக குறைக்கப்படுகிறது. 20 பேர் வரை குழுவாக தங்கும் டார்மெட்ரியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.250லிருந்து ரூ.150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 40 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பச்சமலை சூழலியல் சுற்றுலா வரும் பயணிகளுக்கு உணவு, மலையேற்றம் வழிகாட்டி உதவியுடன், நீர்வீழ்ச்சியில் குளியல், கோவில்களுக்கு அழைத்துச் செல்லுதல், மலைவாழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களும் இலவசமாக வனத்துறையால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆன்லைனின் முன்பதிவு...
பச்சமலை சூழலியல் சுற்றுலாச் செல்ல விரும்பும் பயணிகள் dfotry@gmail.com என்ற இ- மெயில் முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் இங்கு தங்க முன்பதிவு செய்யலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

மாலை வணக்கம் நன்பர்களே.!!!!!!!!
பதிலளிநீக்கு